undefined

அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

 

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி இன்று காலமானார்.  கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வயது 60. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கந்தசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் எம்.எல்.ஏ. கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  

அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவிற்கு முதல்வர்  ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது