undefined

பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!

 
 


 

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணியை உறுதி செய்வது, கட்சியை பலப்படுத்துவது, பொதுக்குழு, மாநாடு ,  கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவது என தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் கூட மதுரையில்  திமுக பொதுக்குழு கூட்டப்பட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. 


இதன் தொடர்ச்சியாக  இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.  இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் 2026ல் நடைபெற்வுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது , மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பழனிசாமி ஆலோசனைகள் வழங்க உள்ளார். 


ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிப்பது குறித்தும்  இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு முன்மொழிவு மற்றும் வழிமொழிவுக்கான மனுக்களில் எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது