undefined

இன்று வேலூர் குடியாத்தத்தில் அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு மருத்துவமனையைத் திறக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பின் பேரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

40 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. பழைய மருத்துவமனையில் போதிய இடவசதி, படுக்கைகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

குடியாத்தம் நகராட்சியில் சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில். திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் த. வேலழகன் மற்றும் குடியாத்தம் நகரச் செயலாளர் பழனி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!