எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வருகை... மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்... !
துபாயிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு சென்னை வந்த எமிரேட்ஸ் விமானங்களில் 217 மற்றும் 364 பேர் பயணித்தனர். அவர்கள் வருகையை குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கடலூரைச் சேர்ந்த ஜனனி, துபாயில் குண்டுவெடிப்பு சத்தம் மற்றும் ராணுவ விமானங்களின் ஓசை இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த பீட்டர், துபாயில் பெரும் பதற்றம் இல்லை; மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர் என்று கூறினார். சுற்றுலாவுக்காக சென்ற பயணிகளுக்கு விமான நிலையத்திலும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தர்ஷினி என்ற பயணி, குண்டு வெடிக்கும் சத்தங்களும் ராணுவ விமானங்கள் பறக்கும் ஓசைகளும் கேட்பதால் சற்று அச்சமாயிருந்தாலும், வீட்டில் பாதுகாப்பாக இருந்தோம் என தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!