கலெக்டர் அலுவலகத்திற்கு வெளிநாட்டு லென்ஸ் பொருத்தப்பட்ட ஏர் கன்னுடன் வந்த ஆசாமி... பரபரப்பு!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, மூலனூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜ்குமார் சொகுசு காரில் வந்தார். போலீசார் காரை சோதனை செய்தபோது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ் பொருத்தப்பட்ட ஏர் கன் 0.22 நவீன துப்பாக்கி கண்டறியப்பட்டது.
ராஜ்குமார் தனது உரிய ஆவணங்களை காட்டி, துப்பாக்கி சோதனைக்கான அனுமதி வைத்திருந்தார். தொடர்ந்த விசாரணையில், புதிதாக மற்றொரு துப்பாக்கிக்கு உரிமம் பெறுவதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தபோது தவறுதலாக இந்த துப்பாக்கியை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த ஏர் கன் கொண்டு வந்ததும் போலீசார் உறுதி செய்தனர். சம்பவம் காவல் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!