தில்லி–ஷாங்காய் இடையே 6 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
6 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லி–ஷாங்காய் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு இந்தியா–சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2026 பிப்ரவரியில் இருநாடுகளுக்குமிடையே மீண்டும் சேவை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மாநகரின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புது தில்லிக்கு 230 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம் இன்று (பிப். 1) காலை புறப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விமான சேவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு, வணிகம், கல்வி மற்றும் நிறுவன ரீதியான தொடர்புகளை மேம்படுத்தும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!