undefined

இண்டிகோ ரத்தால் பிற நிறுவனங்களின்விமான டிக்கெட் 10  மடங்கு வரை உயர்ந்தது... பயணிகள் அதிர்ச்சி!

 

விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான சேவை கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானச் சேவையில் நேற்று ஒரே நாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாகப் பயணிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள சூழ்நிலையைப் பிற விமான நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் விலை உயர்வு விவரம்: 

சென்னை - கோவை: வழக்கமான விலை சுமார் ரூ.5,400 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.57,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு: ரூ.6,000 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.18,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி: ரூ.4,600 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.26,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!