விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் பாய்ந்த கார்.... பரபரப்பு வீடியோ!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில், வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று திடீரென விமான நிலையத்திற்குள் புகுந்தது.
நேராக டிக்கெட் கவுண்ட்டரை நோக்கி பாய்ந்த காரால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் விமான நிலையத்தில் இருந்த 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஓட்டுநரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!