undefined

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை?! வலுக்கும் சர்ச்சை!!

 

தமிழ் திரையுலகில் சத்தமின்றி  முத்திரை கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபகாலமாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருடைய ஃபர்ஹானா திரைப்படம் தற்போது திரைக்கு வரத் தயாராக உள்ளது.  இப்படத்தில் தன்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், தன்னைப்போல் அவர்கள் எதற்கும் ஏங்கிவிடக்கூடாது என நினைக்கும் ஒரு சராசரி தாயாக நடித்துள்ளார். அவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார்

<a href=https://youtube.com/embed/IFJpD1Z73ac?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IFJpD1Z73ac/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Farhana Teaser (Tamil) | Aishwarya Rajesh, Selvaraghavan | Justin Prabhakaran | Nelson Venkatesan" width="462">

அவர் தன்னுடைய மத கோட்பாடுகளை தாண்டி வேலைக்கு செல்கிறார். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
படத்தின் டீசர் வெளியான போதே, கண்டிப்பாக இப்படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புக்களும், சர்ச்சைகளும் உருவாகலாம் என கருதப்பட்டது வர வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஏற்ற போல் இந்திய தேசிய லீக் கட்சி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.  ஐஸ்வர்யா ராஜேஷ் உடன்  ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா  பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.


 இந்திய தேசிய லீக் கட்சி அளித்துள்ள புகாரில், ஃபர்ஹானா திரைப்படத்தின், டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அவை இஸ்லாமிய பண்பாடு கலாச்சாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. இதனால்  ஃபர்ஹானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான புர்கா திரைப்படத்தையும்   நீக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர் .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!