கார் ரேஸ் ஆவணப்படத்தில் அஜித்... ஏ.எல். விஜய் இயக்குகிறார்!
அஜித்தின் கார் பந்தயப் பயணம் மற்றும் அவரது தீவிர முயற்சியை மையமாக வைத்து, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். சுமார் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில், அஜித்தின் பயிற்சி முறைகள், சர்வதேசப் போட்டிகளின் காட்சிகள் மற்றும் திரைக்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. இந்த ஆவணப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் இன்று துபாய் மைதானத்திற்கு நேரில் சென்று அஜித்தைச் சந்தித்தனர். அஜித்குமார் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, தனது ரேஸிங் அணி உறுப்பினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
முன்னதாக அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து, பின்னர் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், இன்றைய சந்திப்பு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மட்டுமன்றி, நடிகர் சிபிராஜ் தனது குடும்பத்துடன் அஜித்தைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். அதேபோல், கடந்த வாரம் இசையமைப்பாளர் அனிருத் அபுதாபியில் அஜித்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!