undefined

 தல அஜீத் பெயரில் போலி அறிக்கை... ரசிகர்கள் கொந்தளிப்பு! 

 
 

 

நடிகர் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே எந்த ரீ ரிலீஸ் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு மங்காத்தாவுக்கு கிடைத்துள்ளது. ஓபனிங் என்றாலே அஜித் தான் என்பதை ரீ ரிலீஸிலும் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.

திரையரங்குகள் முன்பு பேனர், பட்டாசு, மேள தாளம், ஆட்டம் பாடல் என கொண்டாட்டம் களை கட்டியது. இதற்கும் ஒரு படி மேலே சென்று, அஜித் நடித்த கேம்பா குளிர்பான விளம்பரத்தை கொண்டு அவரது பேனர்களுக்கு அபிஷேகம் செய்தனர் ரசிகர்கள். படம் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. ரீ ரிலீஸ் ஆன ஆறு நாட்களில் ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மங்காத்தா கொண்டாட்டம் பிடிக்கவில்லை என்றும், இனிமேல் தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் அறிக்கை வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்குமார் ரேசிங், ஷாலினி ஆகியோரின் எந்த சமூக வலைதளத்திலும் அந்த அறிக்கை இல்லை. விசாரணையில் அது முற்றிலும் போலி என்றும், அஜித் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மறுப்புக்குப் பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!