அக்சய் குமார் பாதுகாப்பு வாகனம் விபத்து… 2 பேர் படுகாயம்!
மராட்டிய மாநிலம் மும்பை ஜுகு பகுதியில், பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் நேற்று இரவு விபத்தில் சிக்கியது. இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.
முன்னால் சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த கார் திடீரென மோதியது. இதில் கவிழ்ந்த ஆட்டோ, அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆட்டோ முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!