undefined

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தவெக கொடி... "கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு நிராகரிப்பு"!

 

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்று வரும் இந்த விழாவில், அரசியல் தலையீடு காரணமாக ஒரு சுவாரஸ்யமான மோதல் வெடித்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டபோது, அதன் உரிமையாளர் உற்சாக மிகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) கொடியைக் கையில் ஏந்தி ஆட்டினார். அந்த மாடு களத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. பொதுவாகப் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்குப் பைக், தங்கம் போன்ற பரிசுகள் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசியல் கட்சி அடையாளங்களோ அல்லது கொடிகளோ பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை. இதனை மீறியதால் கோபமடைந்த விழாக்குழுவினர் (கமிட்டி), மைக் மூலமாகவே "இந்த மாட்டிற்குப் பரிசு கிடையாது" என அறிவித்தனர். மேலும் அந்த மாட்டினைப் பட்டியலிடும் போது "கேள்விக்குறி மாடு" எனக் குறிப்பிட்டு, அதற்கு எவ்விதப் பரிசும் வழங்க முடியாது என கமிட்டி கறாராகத் தெரிவித்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!