இனி ஆபீஸ் உள்ளேயே மது அருந்தலாம்... ஜூன் 12ம் முதல் அமல்.. ஊழியர்கள் உற்சாக வரவேற்பு!

 

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள், திருமண நிகழ்வுகளில் மது அருந்த தடையில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்களும், கண்டனக் குரல்களும் வலுத்ததில் அந்த ஆணை திரும்ப பெறப்பட்டது. அலுவலகங்களில் மது அருந்த தடையில்லை என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அலுவலக ஊழியரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக  மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை  அருந்தலாம். இதனை பயன்படுத்த தடை எதுவும் கிடையாது.  அதே நேரத்தில் சில சலுகைகளும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் வகையில் இந்த நடைமுறை ஜூன் மாதம் 12ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அலுவலகம் ஒரு வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் எனவும், அந்த பரப்பளவு அலுவலகத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். ஒரு வேளை வாடகை அல்லது குத்தகையாக இருந்தாலும் பரவாயில்லை எனத் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!