undefined

புத்தாண்டு கொண்டாட்டம்…   நள்ளிரவு வரை மது விற்பனைக்கு அனுமதி!

 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திராவில் மது விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். 2026 புத்தாண்டை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கலால் மற்றும் மதுவிலக்கு இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், நாளையும் நாளை மறுநாளும் ஏ4 மதுபான கடைகள் நள்ளிரவு 12 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2பி பார்கள் மற்றும் சி.1, இ.பி.1, ஐ.பி.1 உரிமம் பெற்ற ஆந்திர சுற்றுலா மேம்பாட்டு கழக நிறுவனங்கள் அதிகாலை 1 மணி வரை மது விற்பனை செய்யலாம்.

கடந்த ஆண்டு புத்தாண்டில் நடைமுறையில் இருந்த அதே கொள்கையே தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரி செலுத்தப்படாத மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!