நாடு முழுவதும் உஷார் நிலை... அல்கொய்தா பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு... டெல்லியில் ஹை அலர்ட்!
இன்று நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் 10,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு உபகரணங்கள் விரிவாக பயன்படுத்தப்படுவதுடன், உளவு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அச்சுறுத்தல் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!