undefined

அலெக்ஸி நவால்னி மரணம் புதிய சர்ச்சை… ‘நச்சுத் தவளை விஷம் பயன்படுத்தி கொலை’ என ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு!

 

மறைந்த ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் நச்சுத் தவளைகளின் விஷம் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஆர்க்டிக் பகுதியில் உள்ள சிறையில் மர்மமாக உயிரிழந்த நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த விஷம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக அந்த நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ரஷியாவில் இயற்கையாக கிடைக்காத இந்த விஷம் பயன்படுத்தப்பட்டதால் இது திட்டமிட்ட கொலை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை ரஷியா கடுமையாக மறுத்துள்ளது. ரஷிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறுகையில், மேற்கத்திய நாடுகள் தங்கள் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப பொய்யான தகவல்களை பரப்புகின்றன என்று குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நவால்னியின் மனைவி யுலியா நவால்னயா ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுக்கு நன்றி தெரிவித்தார். தனது கணவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!