"திமுக ஆட்சியை வீழ்த்தவே கூட்டணி" - மதுராந்தகத்தில் அன்புமணி ஆவேசம்!

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இதில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை "ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சி" என்று குறிப்பிட்ட அன்புமணி, இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மதுராந்தகம் கூட்டத்திற்கு சுமார் 5 லட்சம் தொண்டர்கள் வருகை தந்திருந்ததாகவும், இது ஒரு மாநாடு போல் அமைந்திருந்தது என்றும் அவர் பெருமிதம் கொண்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பிரதமர் மோடி முழுமையான உறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக இந்த மதுராந்தகம் பொதுக்கூட்டம் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

மதுராந்தகம் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றது, தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வலுப்பெற்றுள்ளதைக் காட்டுகிறது. "கெடுங்கோல் ஆட்சியை வீழ்த்த வேண்டும்" என்பதே இந்தக் கூட்டணியின் தாரக மந்திரமாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!