தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு… 2026 தேர்தல் களத்தில் விஜய் !
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பட்டியலில் தவெக இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தவெக வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
விஜய் தலைமையில் கட்சி பதிவு செய்யப்பட்டதும், சின்னம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, தற்போது காலியாக இருந்த விசில் சின்னம் தவெகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் முன்பு வேறு கட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விசில் சின்னம் மக்களிடையே எளிதில் அடையாளம் காணக்கூடியது என்பதால், இது கட்சிக்கு பெரும் பலமாக இருக்கும் என்று தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில், விசில் சின்னத்தை மையமாக வைத்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!