மார்ச் 6ம் தேதி அல்லு அர்ஜுன் வீட்டில் திருமணம்... வைரலாகும் இன்ஸ்டா!
நடிகர் அல்லு சிரிஷ் தனது காதலி நயனிகா ரெட்டியை அடுத்தாண்டு மார்ச் 6-ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். வேடிக்கையான இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் இந்த செய்தியை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண தேதியில் ஒரு சுவாரசியமான ஒற்றுமையும் உள்ளது. அல்லு சிரிஷின் சகோதரர் அல்லு அர்ஜுன் – சினேகா ரெட்டி திருமணம் 2011-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி நடந்தது. அதே தேதியில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லு சிரிஷின் திருமணமும் நடைபெற இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஐதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அல்லு குடும்பத்தில் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் காத்திருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!