undefined

தமிழ்நாட்டில் ‘அல்மாண்ட் கிட்’ சிரப்புக்கு தடை! 

 

பீகார் மாநிலத்தில் ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பில் உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருளான எதிலீன் கிளைகால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிலீன் கிளைகால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளையும் தாக்கி உயிரிழப்புக்கும் காரணமாகலாம். இதனால் இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்கள், மருத்துவமனைகள், வினியோகஸ்தர்கள் உடனடியாக இந்த சிரப்பை விற்பனையிலிருந்து நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் அல்லது புகார்களுக்கு 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!