ஏற்கனவே சம்பளம் பத்தல...  சமையல் எண்ணெய்  சோப்பு தொடங்கி ஷாம்பு, பெயிண்ட் வரை விலை உயர வாய்ப்பு...! 

 

மேற்காசிய நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், உலக நாடுகளே ஆடிப்போய்க் கிடக்கின்றன. அங்கு நடக்கும் மோதலால் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் எகிற, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் 'சரசரவென' பாதாளத்தை நோக்கிச் சரிந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், அந்தப் பாரத்தை எல்லாம் சாமானிய மக்கள் தலைலேயே சுமத்த நிறுவனங்கள் இப்போதே தயாராகிவிட்டன.

allowfullscreen

சமையல் எண்ணெய் தொடங்கி, சோப்பு, ஷாம்பு மற்றும் வீட்டுக்கு அடிக்கும் பெயிண்ட் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் 3 முதல் 4 சதவீதம் வரை உயரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையால் தவிக்கும் மக்களுக்கு, இப்போது அன்றாடப் புழக்கப் பொருட்களின் விலை உயர்வும் சேர்ந்து 'இருதலைக் கொள்ளி எறும்பு' நிலையை ஏற்படுத்தியுள்ளது. "ஏற்கனவே வாங்குற சம்பளம் பத்தல... இதுல இது வேறயா?" என இல்லத்தரசிகள் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டனர்.

உண்மையைச் சொல்லப்போனால், ஏற்கனவே ஹோட்டல் உணவுகள், சிமென்ட் மற்றும் விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொட்டுவிட்டன. இப்போது நுகர்வோர் பொருட்களின் விலையும் ஏறுவதால், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பட்ஜெட்டை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். போர் அங்கே நடந்தாலும், அதன் பாதிப்பு என்னவோ இங்கே இருக்கும் ஏழை எளிய மக்களின் சமையலறையில்தான் எதிரொலிக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!