இன்போசிஸை தொடர்ந்து அமேசானில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கம் ... தொடரும் சோகம்!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசான், கடும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக பல நிறுவனங்கள் பணியிடங்களை குறைத்து வரும் நிலையில், அமேசானும் அதே பாதையில் பயணித்து வருகிறது.
கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 27,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி மேலும் 14,000 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, இதுவரை இல்லாத அளவில் ஒரே கட்டமாக 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் 27ம் தேதி முதல் 14,000 முதல் 16,000 வரை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவளத் துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!