undefined

ஆம்புலன்ஸ் விமானம் விபத்து… சிகிச்சைக்குச் சென்ற குடும்பமே பலி!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ராஞ்சியில் உள்ள உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சஞ்சய் (41) பலத்த காயமடைந்தார். முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மாற்ற தீர்மானிக்கப்பட்டது. குடும்பத்தினர் அவசரமாக ஏற்பாடுகளில் இறங்கினர்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிகிச்சை செலவு மற்றும் விமான வாடகைக்காக ரூ.8 லட்சம் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கினர். சஞ்சயுடன் அவரது மனைவி அர்ச்சனா, உறவினர் துருவ் ஆகியோரும் விமானத்தில் பயணம் செய்தனர்.

ஆனால் ராஞ்சியில் இருந்து புறப்பட்ட சில நேரத்திலேயே சத்ரா மாவட்டத்தில்  விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சஞ்சய், அர்ச்சனா, துருவ், விமானிகள் மற்றும் மருத்துவ குழுவினர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!