undefined

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 4 பேர் பலி... !

 

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்டீரித் பகுதியில் கடந்த மார்ச் 1 அதிகாலை மர்ம நபர் ஒருவர் திறந்தவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் University of Texasயில் முதுகலை பட்டம் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி சவிதா சன்முகசுந்தரம் (21) உயிரிழந்தார். மேலும் ரைடர் ஹாரிங்டன் (19) உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். அமெரிக்க அதிகாரிகள் இரு பேரின் அடையாளங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் செனீகல் நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற நிடியாகா டியாக்னே (53) என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சம்பவ இடத்திலும் அவரது இல்லத்திலும் இருந்து ஈரான் நாட்டுக் கொடி மற்றும் தீவிரவாத குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது அரசியல் நோக்கத்துடன் நடைபெற்ற தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!