இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி!
இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தார். இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவு செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் அதிகளவில் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ், இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாயப் பொருள்கள் இந்திய சந்தையில் பெரும் அளவில் நுழையும் என தெரிவித்தார். இந்தியாவுடனான வேளாண் வர்த்தகப் பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்ததாகவும், புதிய ஒப்பந்தங்கள் அமெரிக்க வேளாண் துறைக்கு முதல் வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து எந்தெந்த வேளாண் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!