undefined

நடுவானில் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்கப் பெண்... உயிரைக் காப்பாற்றிய காங்.முன்னாள் எம்.எல்.ஏ!

 

கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த அமெரிக்கப் பெண் ஒருவரின் உயிரை, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான அஞ்சலி நிம்பால்கர் காப்பாற்றி உள்ளார். அவரது இந்தத் துணிச்சலான, விரைவானச் செயலுக்கு விமானப் பயணிகள் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

பெலகாவி மாவட்டம் கானாபூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஞ்சலி நிம்பால்கர் ஒரு மருத்துவர் ஆவார். இவர், டெல்லியில் நடைபெற்ற வாக்குத் திருட்டுக்கு எதிரானப் பிரசாரத்தில் கலந்துகொள்ளக் கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் வானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், உடன் பயணித்த அமெரிக்கப் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு நாடித்துடிப்பும் நின்றுவிட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த அப்பெண்ணின் அருகில் விரைந்து சென்ற மருத்துவர் அஞ்சலி நிம்பால்கர், உடனடியாகவும், சாமர்த்தியமாகவும் செயல்பட்டு அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளித்தார். அவரதுச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஆனாலும், அரை மணி நேரம் கழித்து அந்தப் பெண் மீண்டும் மயங்கி விழுந்து, நாடித்துடிப்பு மீண்டும் நின்றது. ஆனால், மருத்துவர் அஞ்சலி நிம்பால்கரின் தொடர்ச்சியான முயற்சிகளால் அவர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, டெல்லி வரை அழைத்துச் செல்லப்பட்டார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்தப் பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விமானத்தில் ஏற்பட்ட இந்த மருத்துவ அவசரநிலையைச் சிறப்பான முறையில் கையாண்டு, சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் அஞ்சலி நிம்பால்கரின் துணிச்சலானச் செயலை சகப் பயணிகள் பலரும் பாராட்டினர். அத்துடன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்படப் பல அரசியல் தலைவர்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!