14 நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனே வெளியேறுங்க... அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை!
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. பஹ்ரைன், எகிப்து, ஈராக், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும் நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!