மதுரையில் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு... இன்று காலை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்கிறார்!
ன்று மாலை மதுரையில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றிரவு மதுரை வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினரும், அதிமுகவினரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இன்று ஜூன் 8ம் தேதி மாலை மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு 10:40 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை, மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன், வானதி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வரவேற்றனர்.
அதன் பின்னர் தனியார் ஓட்டலில் அமித்ஷா தங்கினார். இந்நிலையில் இன்று ஜூன் 8ம் தேதி காலை 11:20 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்கிறார். பின் மாலை 4:05 மணிக்கு பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அமித்ஷா வருகையையொட்டி மதுரை முழுவதுமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள போதிலும் இப்போதே எல்லா கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. 2026-ம் ஆண்டு தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மதுரையில் கடந்த ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது இந்த சுற்றுப்பயணம் மதுரை அல்லது கன்னியாகுமரியில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக நகர்ப்புறங்கள் கிராமப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரச்சார திட்டங்களை வகுக்கும்படி அதிமுக மூத்த தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முக்கியமானதாக கருதுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜக மேலிட தலைவர்களின் குறிக்கோளாக உள்ளது.
இந்த குறிக்கோளை எட்டுவதற்காகவே அதிமுக-பாஜக கூட்டணியை கடந்த மாதம் சென்னைக்கு வந்து மத்திய மந்திரி அமித்ஷா உருவாக்கினார். இந்த கூட்டணியை மேலும் வலுவடைய செய்வதற்கு அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரவும் திட்டமிட்டுள்ளார்.
தேர்தலுக்கான முதற்கட்டமாக இன்று ஜூன் 8ம் தேதி மதுரையில் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். இன்று மாலை நடைபெற உள்ள தென் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அமித்ஷா தேர்தல் கூட்டணி, சட்டமன்ற தேர்தல் தொகுதிகள் வெற்றி விவரம், வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவும் இணைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!