பிப்ரவரி 20ம் தேதி அமித்ஷா அஸ்ஸாம் பயணம்... ஊடுருவல்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை!
அஸ்ஸாம் மாநில எல்லை வழியாக பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தோர் அதிகளவில் சட்டவிரோதமாக நுழைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஊடுருவல் விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
சிறப்பு ஆய்வுப் பணிகளின் போது சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன. சமீபத்தில் சசார் மாவட்டத்தின் நதன்பூர் கிராமத்தில் 200 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 20ம் தேதி அஸ்ஸாம் மாநிலம் சசார் மாவட்டத்திற்கு வருகிறார். சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள நதன்பூர் கிராமத்தில் நடைபெறும் பல்துறை மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அவரது வருகையையொட்டி எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் அசாம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!