பாஜகவில் இணைந்த அமமுக... பியூஸ் கோயலுடன் டிடிவி சந்திப்பு!?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் டிடிவி தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொகுதி பங்கீடு, பிரசாரம், கூட்டணியின் செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக கூறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கேற்கவில்லை.
சந்திப்புக்குப் பிறகு தினகரன் வெளியிட்ட அறிக்கையில், நல்லாட்சிக்காகவே NDA-வில் இணைந்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம் என்றும் கூறினார். 2026 தேர்தலுக்கு முன் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பொங்கலுக்குப் பிறகு அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!