காது வலிக்கு மருத்துவமனை சென்ற 11ம் வகுப்பு மாணவி திடீர் மரணம்! உறவினர்கள் போராட்டம்!

 

தீராத காது வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற மாணவி அபிநயா, மருத்துவர்களின் அலட்சியத்தால் மரணமடைந்ததாக, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களை கடவுள் போல நம்புகிற சமூகம் நம்முடையது. ஏதாவது செய்து உயிரைக் காப்பாற்றிக் கொடுங்க என்று தான் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அவசர காலத்தில் மருத்துவமனையில் டாக்டர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். பல நல்ல, சக உயிர்களை மதிக்கும் மருத்துவர்கள் இருக்கும் இதே சமூகத்தில் தான் ‘ரமணா’ ஸ்டைல் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வாழ்கிறார்கள். சமீபத்தில் கால் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற விளையாட்டு வீராங்கனை, அதன் பின்னர் சாதாரண வலிக்கு தன்னுடைய கால்களையே இழக்க நேரிட்டது.

பிரச்சனை அதோடு முடியவுமில்லை. மருத்துவர்களின் அலட்சியத்தால், கால்களை இழந்த கல்லூரி மாணவி, அதன் பின்னர் தன்னுடைய உயிரையும் இழந்தால். அந்த சோகத்தின் சுவடுகள் கூட மறையாத நிலையில், காது வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவி அபிநயா, மரணமடைந்துள்ளது உறவினர்களையும், நண்பர்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16), ராயபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ்-1 படித்து வந்தார்.  மாணவி அபிநயாவுக்கு சிறு வயது முதலாகவே காதில் வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு அபிநயாவுக்கு காதில் தொடர்ந்து வலி ஏற்பட்டட் நிலையில், தன்னால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை என தாயாரிடம் கூறி இருக்கிறார். 

காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாய் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், காதில் சின்னதாக அறுவை சிகிச்சை செய்தால்வலியை சரி செய்ய முடியும் எனக் கூறியுள்ளனர். 

இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 15ம் தேதி மாணவி அபிநயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அபிநயாவுக்கு காதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அபிநயாவுக்கு திடீரென இதயத் துடிப்பு அதிகமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வேறொரு தனியார் மருத்துவமனையில் அபிநயாவை கொண்டு சென்றனர். எனினும், அவரது இதயத் துடிப்பு சீராகாத நிலையில், அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அபிநயா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?