"அன்புமணி என் உயிரை மட்டும்தான் எடுக்கலை; மீதி எல்லாவற்றையும் பறிச்சுட்டான்” - பாமக ராமதாஸ் வேதனை!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கடலூர் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், தனது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசியது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், "பாமக கட்சியை 46 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து நான் ஒருவன் தான் பாடுபட்டுக் கொண்டு வந்தேன். கல்வி மற்றும் தொழிலில் மேலும் முன்னேற நாம் உழைக்க வேண்டியது இருக்கிறது, போராட வேண்டியது இருக்கிறது. அந்த வகையில், வரும் டிசம்பர் 12ஆம் தேதி நமது உரிமைகளை மீட்க நாம் அனைவரும் போராட இருக்கின்றோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது மகன் அன்புமணி ராமதாஸைக் குறிப்பிடாமல், மிகவும் வேதனையுடன் வார்த்தைகளை உதிர்த்தார். "சினிமாவில் கூறுவார்கள், 'எனக்கு ஒரு மகன் பிறப்பான், என்னைப் போல இருப்பான்' என... ஆனால், எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரைத்தான் அவன் பறிக்கவில்லை; மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான். என் உரிமையைப் பறித்தான். நான் சிந்திய வியர்வையைப் பறித்தான்" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
மேலும், அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் சூழ்ச்சியினால் ஏற்பட்டவை என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார். "உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில் தான் இன்றைக்கும் டெல்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்."
"சூழ்ச்சியினால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள், வன்னிய மக்கள், பிற சமூகத்தினர், பிற கட்சிகள் எல்லாம் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார்கள். நீ எந்த கோர்ட்டுக்கு போனாலும் இந்த ராமதாஸைத் தோற்கடிக்க யாராலும் முடியாது. மக்கள் என் பக்கம் உள்ளனர்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
இறுதியாக, கட்சிக்குள் நிலவும் பிரச்சினை ஒருபுறம் இருக்க, பாமகவின் கூட்டணி குறித்த முடிவை எடுக்க, டிசம்பர் 30ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் கூட்டி அதன் பின் அறிவிக்கப்படும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!