"ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன்" - அன்புமணி ராமதாஸ்
திமுக அரசின் நிதி நிர்வாகம் சீரழிந்துள்ளதாகவும், தமிழகம் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒரே ஆண்டில் (2025-26) மட்டும் தமிழக அரசு ரூ.1.84 லட்சம் கோடி (ரூ.1,84,551 கோடி) கடனாக வாங்கியுள்ளது. இது திட்டமிடப்பட்ட அளவை விட 21% அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மொத்தக் கடன் அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் சராசரியாக ரூ.1.27 லட்சம் கடன் சுமை உள்ளது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சம் கடன் உள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் (1952-2021) வாங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ.4.56 லட்சம் கோடி. ஆனால், திமுகவின் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரசு வாங்கும் கடனைப் புதிய உட்கட்டமைப்புகளை (சாலைகள், பாலங்கள்) உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அரசு வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில், வெறும் ரூ.51,443 கோடி மட்டுமே மூலதனச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வாங்கிய கடனில் பெரும்பகுதி பழைய கடனை அடைப்பதற்கும், வட்டி கட்டுவதற்கும் மற்றும் அன்றாடச் செலவுகளுக்குமே (ஊதியம், மானியம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. "புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்கும் நிதி நிர்வாகத்தையே திமுக அரசு செய்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.
இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய விவரங்கள். 2027-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2026-27 நிதியாண்டில் மட்டும் மேலும் ரூ.1.79 லட்சம் கோடி கடனாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026-27-ல் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!