undefined

’தமிழக மக்களுக்காக வேண்டிக் கொண்டேன்’ திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் வழிபாடு

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அதிகாலை, குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். 
திருமலைக்கு வருகை தந்த அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இன்று காலை நடைபெற்ற விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் அவர் ஏழுமலையானை வழிபட்டார். கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர் வெங்கடாஜலபதியைத் தரிசித்து மனமுருகி வேண்டிக் கொண்டார். தரிசனம் முடிந்த பிறகு, ரங்கநாயகுலு மண்டபத்தில் அவருக்குத் தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் ஏழுமலையான் திருவுருவப் படம் வழங்கப்பட்டது.

தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "உலக மக்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்றும், தமிழக மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் மக்கள் நலனுக்காகவே செயல்படும் என்று குறிப்பிட்டார். பாமகவின் நீண்ட காலக் கோரிக்கையான முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தினார். அன்புமணி ராமதாஸின் இந்தத் திடீர் ஆன்மீகப் பயணம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!