விபத்தில் மூளைச்சாவு அடைந்த  அங்கன்வாடி ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம்!

 

இடைகால் பகுதியில் வசித்து வருபவர்  49 வயது முனியம்மாள் .இவர்  அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 7ம் தேதி மாலை அம்பாசமுத்திரத்தில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது கலைக்கல்லூரி அருகே பின்னால் வந்த கார் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் முனியம்மாள் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு அறிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் ஆலோசித்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அதன் படி கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. மருத்துவர்கள் மரியாதை செலுத்திய பின்னர் முனியம்மாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!