மகளுடன் பேசியதால் ஆத்திரம்... ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இளைஞர் படுகொலை!

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் எனும் இளைஞர், கேரளாவில் ரப்பர் தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் பணிபுரிந்தார். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருந்தது.

சம்பவத்தன்று கண்ணூர் பகுதியில் இருந்து யஷ்வந்த்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர். தியாகராஜனின் மகளும் அவருடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

ரயில் பயணத்தின் போது, பாத்ரூம் சென்ற தியாகராஜனின் மகள் நீண்ட நேரமாக இருக்கைக்கு வராததால் முகேஷ் அவரைத் தேடி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெகுநேரமாகியும் இருவரும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தியாகராஜன் மகளையும், முகேஷையும் தேடிச் சென்றார். ரயில் பெட்டியின் கதவு அருகே நின்றுக் கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவர் ஆத்திரமடைந்தார்.

அந்த கோபத்தில் முகேஷை பலமாக எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் முகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பின்னர் தன்னுடன்  ரயில் பயணித்த முகேஷைக் காணவில்லை என தியாகராஜனே போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால்  சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட  கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து போலீசார் தியாகராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!