undefined

காதலைப் பிரித்ததால் ஆத்திரம்... நண்பனின் குடும்பத்தைத் தாக்கிய வாலிபர்!

 

நீண்ட கால நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு, கடைசியில் வன்முறையில் முடிந்துள்ள சம்பவம் சூளைமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (24) மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த அருண் (24) ஆகிய இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

அருண் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணிடம் அருணைப் பற்றிப் பேசிய கார்த்திக், "அருணுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது" என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அருணுடனான காதலைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

தனது காதல் பிரிந்ததற்கு கார்த்திக் தான் காரணம் என ஆத்திரமடைந்த அருண், சூளைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள கார்த்திக்கின் மனைவி ஷர்மிளாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஷர்மிளா மற்றும் அவரது தாயாரை அருண் ஆபாசமாகத் திட்டியதுடன், இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!