தாய் மீது பாய்ந்ததால் ஆத்திரம்... சிறுத்தை புலியை கைகளாலேயே அடித்து கொலை செய்த இளைஞர்!
ஒடிசா கட்டாக் மாவட்டம் மொரதா பகுதியில் சத்யபிரதா பூர்த்தி (24) குடும்பத்துடன் வசித்து வருகிறார். பண்ணை வீட்டில் இருந்தபோது, சிறுத்தைப்புலி ஒன்று திடீரென வேலியை தாண்டி குடியிருப்புக்குள் நுழைந்தது. காவலுக்கு இருந்த வளர்ப்பு நாயை தாக்கிய சிறுத்தையின் குரல் கேட்டு அவரது தாயும், பின்னர் பூர்த்தியும் ஓடி சென்றனர்.
அப்போது அந்த சிறுத்தை இருவரையும் நோக்கி பாய்ந்தது. குடும்பத்தினரை காப்பாற்ற பூர்த்தி துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். சிறுத்தைக்கும் அவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பூர்த்தி கைகளால் தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, சம்பவம் முடிந்திருந்தது.
தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சிறுத்தையின் உடல் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பூர்த்திக்கு மார்பு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுத்தைக்கு நோய் அல்லது காயம் இருந்ததா என்பதை அறிய பிரேத பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!