குவிந்த பக்தர்கள்.... சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சசபைகளில் ஒன்று. இந்த ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த 2 திருவிழாக்களின் போதும் 10 நாட்களுக்கு முன்னதாகவே கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில், வேத மந்திரங்கள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்ற விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதே நாள் இரவில் 1000 கால் மண்டபத்தில் பல்வேறு பூஜைகள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 2ம் தேதி ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆனி திருமஞ்சன திருவிழாவின்போது நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடி கருவறைக்கு பிரவேசம் செய்வர். இந்நிகழ்வு தான் இந்த ஆணி திருமஞ்சன திருவிழா ஆகும். இன்று ஆனித் திருமஞ்சன கொடியேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!