முடங்கிய ரிலையன்ஸ்  சாம்ராஜ்யம்... ரூ19694 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில்  சிபிஐ பிடியில் சிக்கிய அனில் அம்பானி! 

 

இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமம், தற்போது சிபிஐ-யின் தீவிரப் பிடியில் சிக்கியுள்ளது. கடந்த 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 11 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் பெற்ற சுமார் 19,694 கோடி ரூபாய் கடனில், சுமார் 2,929 கோடி ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் பெரும் புகார் எழுந்துள்ளது. தணிக்கை அறிக்கையின்படி, இந்தக் கடன் தொகையைப் போலி நிறுவனங்கள் மற்றும் குழும நிறுவனங்களுக்கு இடையே சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்து வங்கிகளை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

இந்த மெகா மோசடி தொடர்பாக ஏற்கனவே கடந்த வாரம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் தொடர்பான 228 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மகனைத் தொடர்ந்து தற்போது தந்தையிடமும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று (மார்ச் 20, 2026) காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானியிடம், நிதிப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களைக் காட்டி அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ-யின் இந்த அதிரடி நடவடிக்கையால் இந்தியத் தொழில் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனில் அம்பானி சட்டத்திற்கு மதிப்பளிப்பவர்; விசாரணை அமைப்புகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள இந்தக் கடன் விவகாரத்தில், சிபிஐ எடுத்து வரும் அடுத்தகட்ட நகர்வுகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பெரும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!