undefined

அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்... மொத்த மதிப்பு ரூ. 10,117 கோடியாக உயர்வு!

 

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி மீது தொடுக்கப்பட்டுள்ள பண மோசடி வழக்கு தொடர்பாக, இன்று அமலாக்கத்துறை அவரது மேலும் ரூ. 1,120 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறையால் இதுவரை முடக்கப்பட்ட அவரது மொத்தச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 10,117 கோடியாக அதிகரித்துள்ளது.

அனில் அம்பானிக்குச் சொந்தமான 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி சுமார் ரூ. 3,000 கோடி கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற இந்தக் கடன் சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அவர் மொத்தம் ரூ. 17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை முன்பு அனில் அம்பானியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருந்த அமலாக்கத்துறை, இன்று மேலும் ரூ. 1,120 கோடி சொத்துக்களை முடக்கியதன் மூலம், அனில் அம்பானி மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!