ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி… !
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் பல்வேறு இடங்களில் அண்ணாவின் நினைவுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேரணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
அண்ணா நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்ணா தமிழர்களின் மனசாட்சி என குறிப்பிட்டுள்ளார். நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணாவை நினைப்பதே திமுகவின் வழக்கம் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை ஆளுவது அண்ணாதான் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!