சட்டக்கல்லூரி மாணவி கார் மோதி மூளை சிதறி பலி, 3 மாணவர்கள் படுகாயம்... அண்ணா பல்கலைக் கழகம் எதிரே கொடூர விபத்து !
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருங்குடியில் உள்ள சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த அவர், நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் இருந்து தரமணி நோக்கி திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.
காந்தி மண்டபம் சாலையில் அவுட் கேட் அருகே முன்னால் சென்ற கார் திடீரென வலப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது. அதிவேகமாக வந்த மாணவர்கள் பயணித்த கார் பிரேக் பிடிக்க முடியாமல் மோதியதில் ஜூனு மூளை சிதறி உயிரிழந்தார். கார் ஓட்டிய அப்ரருல் ஆர்த்திப், பிரியா, ஜெகதீப் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வெங்கடேசனும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!