பாஜக தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை நியமனம்... குவியும் வாழ்த்துக்கள்!
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதாக கர்நாடக பாஜக எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் உட்பட பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் யதுவீர் மற்றும் தருண் விஜயின் பதிவுகளைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், இந்த நியமனம் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலையின் புதிய பதவி குறித்த ஊகங்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!