"அண்ணாமலை தமிழினத்தின் மகன்.. தொட்டுப் பார்!" - ராஜ் தாக்கரேவுக்கு சீமான் 'பஞ்ச்' பதில்!
மும்பை மாநகராட்சித் தேர்தல் களம் தற்போது மகாராஷ்டிராவைத் தாண்டித் தமிழகத்திலும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அண்ணாமலையை 'வெட்டுவேன்' என்று மிரட்டிய ராஜ் தாக்கரேவுக்கு, சீமான் விடுத்துள்ள கண்டன அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை மராத்தியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அது ஒரு பன்னாட்டு நகரம்" என்று பேசினார். இது 'மண்ணின் மைந்தர்' அரசியல் செய்யும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவைச் சீண்டியது. அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவர் கால்களை வெட்டுவேன் என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாக எச்சரித்தார்.
"அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, 'வெட்டுவேன்' என்று மிரட்டுவது முறையல்ல. அண்ணாமலை வெறும் பாஜக-காரர் மட்டுமல்ல, அவர் முதலில் தமிழ்த்தேசிய இனத்தின் மகன்.ஆந்திர காட்டில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது கேட்க ஆள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு. ஒரு தமிழனை அச்சுறுத்த நினைத்தால், கட்சி எல்லைகளைக் கடந்து நாங்கள் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!