undefined

 பரபரக்கும் தமிழக அரசியல்... பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கம்?! 

 


 தமிழகத்தில் 2026 தேர்தல் களத்தை நோக்கி அரசியல் கட்சிகள் பணியை தொடங்கியுள்ளன. சமீபகாலமாக  அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை பற்றிய பேச்சுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.  அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் தனித்தனி டெல்லி பயணங்கள், அங்கு பாஜக மூத்த தலைவர்களுடனான சந்திப்புகள் அதன் பிறகான அரசியல் நகர்வுகள் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

 


இந்த சந்திப்புகள் குறித்து அதிமுக மற்றும் பாஜக  தரப்பில் இருந்தும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பாஜக தேசிய தலைமை அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்.  ஒருங்கிணைந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்  அதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில்  பாஜக தேசிய தலைமை அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக மூத்த  நிர்வாகிகளுக்கும், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாததே காரணம் என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து  பாஜக தேசியத் தலைமை கூட்டணிக்காக மாநிலத் தலைமையை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 


ஒருவேளை பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால் அண்ணாமலை வகித்த பதவிக்கு முதல் வரிசையில் இருப்பவர் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் முன்னர் அதிமுகவில் இருந்த காரணத்தால் அதிமுக – பாஜக கூட்டணி இலகுவாக இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அடுத்த இடத்தில் தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், புதியதாக கட்சியில் இணைந்த சரத்குமார் பெயர் கூற இருப்பதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
பாஜக மாநிலத் தலைமை மற்றம் குறித்த யூகங்களுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட  மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசித்தனர் எனக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?