இன்று 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு தொடக்கம்!
தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி மாற்றத்தைப் பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இன்று ஏப்ரல் 1 புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற உள்ளன.
தேர்வு அட்டவணையின்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. அனைத்துத் தேர்வுகளையும் வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் விரைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்குத் தேர்வுகளை முடித்துவிட்டு, அவர்களைப் பாதுகாப்பாக விடுமுறைக்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 17-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வமாகக் கோடை விடுமுறை தொடங்குகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் மட்டும் பள்ளியின் இறுதி வேலை நாள் வரை பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகளைத் திறக்கப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!