கவர்னர் பேசும் போது மைக் ஆப் செய்யப் பட்டதா? சபாநாயகர் விளக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார். தொடர்ந்து 4-வது ஆண்டாக அவர் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவர்னர் அரசியல்வாதி அல்ல என்றும் அரசின் குறை, நிறைகளை பேச அவருக்கு உரிமை இல்லை என்றும் கூறினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிப்பதே கவர்னரின் கடமை என்று வலியுறுத்தினார்.சபாநாயகர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான். தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் கவர்னரிடம் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவது மரபு என சபாநாயகர் தெரிவித்தார். இந்த நடைமுறை ஒருபோதும் மாற்றப்படாது என்றார். ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும் என்றும், 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!