ஆப்பிள் திடீர் எச்சரிக்கை... குரோம் பயன்படுத்தினால் ஆபத்து?
உலக அளவில் செல்போன், கணினி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாப்பில் ஆப்பிள் கடுமையான விதிகளை பின்பற்றுகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஆப்பிள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பழைய குரோம் மற்றும் அப்டேட் செய்யப்படாத குரோம் வெர்ஷன்கள் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக சபாரி (Safari) பிரவுசர் அதிக பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறியுள்ளது.
பாதுகாப்பு அப்டேட்கள் இல்லாத பிரவுசர்கள் சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே பயனர்கள் தங்களின் பிரவுசர்களை அடிக்கடி அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பே தற்போது மிக முக்கியம் என ஆப்பிள் வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!